Categories
மாநில செய்திகள்

விசாரணைக்கு ஒத்துழைக்காத PSBB பள்ளி நிர்வாகம்… ஆணையர் குற்றச்சாட்டு…!!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இது தொடர்பான விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் சரியான ஒத்துழைப்பு தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை கே.கே நகரில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் ஆன்லைன் வகுப்பு நடைபெறும்போதே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக மாணவிகள் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.எஸ்.பி.பி. பள்ளி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது உரிய விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அனைவரும் தெரிவித்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது. இந்த விசாரணையை பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு துணை ஆணையர் விசாரணை நடத்தியபோது, பள்ளி நிர்வாகம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Categories

Tech |