Categories
அரசியல் மாநில செய்திகள்

சந்தேகப்படாதீங்க…! நான் கலைஞருடைய மகன்… சொன்னதை செய்வான் இந்த ஸ்டாலின்… நம்பிக்கை அளித்த முதல்வர் …!!

கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின்,  இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உறுதிமொழிகளை, தேர்தலில் தந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற நிறைவேற்றவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான எடுத்துக்காட்டுகளை தான் இங்கு குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன்.

இன்னைக்கு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யக்கூடிய திட்டத்தை நாங்கள் வந்தால் நிறைவேற்றுவோம் என்று தேர்தல் நேரத்தில் சொன்னோம், வந்தவுடன் முதல் கையெழுத்து போட்டது அந்த கையெழுத்துதான். அதுதான் நிறைவேற்றப்பட்டுள்ளது.பால் விலையை குறைச்சோம், பெட்ரோல் விலையை குறைச்சோம், இது எல்லாமே தந்த உறுதிமொழிகள்.

வருகின்ற ஐந்தாம் தேதி டெல்லியினுடைய முதலமைச்சர் கெஜ்ரிவால் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வருகிறார். ஸ்மார்ட் ஸ்கூல்,  ஸ்மார்ட் கிளாஸ் என்று அரசு மாநகராட்சி உடைய பள்ளிகளை  தரம் உயர்த்துவதற்கு ஒரு திட்டம் போட்டு இருக்கிறோம். டெல்லிக்கு நான் போகும் போது, பாத்துட்டு வந்தேன். அதை தொடங்கி வைக்க வர வேண்டும் என்று கேட்டிருக்கிறேன். அர்விந்த் கெஜ்ரிவால் வரக்கூடிய அதே நேரத்துல தான், அரசு பள்ளிகளில் படித்து, அரசு கல்லூரியில்  சேரக்கூடிய மாணவியர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்ற உறுதி கொடுத்தோம். அந்த திட்டத்தையும் அன்றைக்கு தான் தொடங்கப் போறோம்.

சில தாய்மார்கள் கேட்டார்கள் ? உரிமைத்தொகை என்ன ஆச்சு ? ஆயிரம் கொடுக்குறோம்னு சொன்னிங்களே என்று…  வரும், நிதி ஓரளவுக்கு சரி செய்து கொண்டிருக்கிறோம். விரைவில் அதையும் சரி செஞ்சு, நிச்சயம், உறுதியா அதையும் நிறைவேற்றுவோம் என்பது உறுதி. அதுல எந்த சந்தேகமும் பட வேண்டாம். நான் கலைஞருடைய மகன், சொன்னதை செய்வான் இந்த ஸ்டாலின். ஆகவே அந்த நம்பிக்கையோடு இருங்கள், அந்த நம்பிக்கையோடு தான் இன்றைக்கு மக்கள் இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெளிவாக தெரிகிறது என தெரிவித்தார்.

Categories

Tech |