ராமநாதபுரத்தில் மது அருந்திவிட்டு ஒருவரை அரிவாளால் வெட்டிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள குடியூர் கிராமத்தில் வெங்கடேஸ்வரன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள மது கடைக்கு இருசக்கர வாகனத்தில் செய்துள்ளார். இதனையடுத்து மது பாட்டிலை வாங்கிய வெங்கடேஸ்வரன் மதுக்கடைக்கு அருகே வைத்து குடித்துள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதி வழியாக வந்த கற்பூர பாண்டியன்(35) என்பவர் இங்கு மது அருந்தக்கூடாது என கண்டித்துள்ளார்.
இதனால் 2 பேருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேஸ்வரன் கற்பூர பாண்டியனை அரிவாளால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் குறித்து கற்பூரபாண்டியன் அளித்த புகாரின் அடிப்படையில் பார்த்திபனுர் காவல்துறையினர் வெங்கடேஸ்வரர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.