Categories
லைப் ஸ்டைல்

பச்சை மிளகாய் அதிகம் சாப்பிடாதீங்க…. இந்த பிரச்சினை வருமாம்…!!

பச்சை மிளகாயை அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை இங்கே பார்க்கலாம்.

பச்சை மிளகாய் என்பது ஒரு காரமான காய்கறி வகையைச் சார்ந்ததாகும். இது நம்முடைய தினசரி சமையலில் சேர்க்கும் ஒரு முக்கியமான உணவுப் பொருள். பச்சை மிளகாயை சாப்பிடுவதால் நமது உடலில் என்னென்ன ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம். நோய் தடுப்பு சக்தியை மேம்படுத்துதல், உடல் எடையை குறைப்பது, ஒருவரை மலச்சிக்கலில் இருந்து விடுதலை போன்றவற்றிற்கு இந்த பச்சை மிளகாய் நன்மை அளிக்கிறது.

பச்சைமிளகாய் குறைந்த கலோரிகளை கொண்டுள்ளதால் கொழுப்பு இல்லாத பொருளாக கூட நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இதில் வைட்டமின் சி, ஏ, கே மற்றும் தாவர ஊட்டச்சத்து பொருட்கள் இருக்கின்றன. இதுபோன்ற ஊட்டச்சத்துக்களால் என்னதான் நன்மைகள் இருந்தாலும், அதை அதிகம் சாப்பிட்டால் பக்க விளைவுகளும் உண்டு.

பக்கவிளைவுகள்:

பச்சை மிளகாயை அதிகமாக சாப்பிடுவதால் தீவிர எரிச்சல் உணர்வு உண்டாகும். வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்தும்.

சிலருக்கு வயிற்று வலி, வயிற்று வலியுடன் கூடிய வயிற்றுப்போக்கு ஏற்படும்.

செரிமான பிரச்சனைகள் எதுவும் இருந்தால் அதை மேலும் அதிகப்படுத்தும். எனவே அதிகமாக மிளகாயை தவிர்ப்பது நல்லது.

மிளகாயில் கேப்சைசின் என்ற பொருள் உள்ளது. இது உடலில் அதிகமாக இருந்தால் தோல் ஒவ்வாமை பிரச்சினை ஏற்படும்.

மிளகாய் தவிர எந்த உணவு பொருளாக இருந்தாலும் கூட எவ்வளவு தான் நன்மையை கொடுத்தாலும் அதிகமாக சாப்பிடும் போது தீய விளைவை உண்டாக்கும். எனவே அதிகமாகசாப்பிட கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Categories

Tech |