Categories
மாநில செய்திகள்

வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் – முதல்வர் வலியுறுத்தல்

வெளிமாநிலங்களுக்கு  தேவையில்லாமல் மக்கள் செல்ல வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.  மேலும் பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதை அடுத்த 15 நாட்களுக்கு  தவிர்க்க வேண்டும் எனவும் கூட்டம் அதிகமாக உள்ள மற்றும் பொது இடங்களுக்கு வயதானவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் குழந்தைகள் செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளார்.

மேலும் கேரளா ,கர்நாடக  எல்லையோர மாவட்டங்களில்  உள்ள  திரையரங்குகள், வணிக வளாகங்கள் வரும் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டு உள்ளார். இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட ரூ 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். பொதுமக்கள் நலன் கருதி வீட்டிற்குள் நுழையும் போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதபடுத்த மாவட்ட ஆட்சியர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |