சில உணவு வகைகளை ஒருமுறை சமைத்தபின் மீண்டும் சூடேற்றி சாப்பிடுவதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
பொதுவாக சாப்பாட்டிற்கு குழம்பு அல்லது கூட்டு ஏதேனும் ஒன்றை வைக்கிறோமெனில், அது அதிகப்படியாக மிச்சமாகும் பட்சத்தில், அதனை சூடு செய்து மறுநாள் சாப்பிடும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உண்டு. ஆனால் அனைத்து வகையான உணவுப் பொருட்களையும் இதேபோன்று ஒருமுறை சமைத்த பின் மீண்டும் சூடேற்றி சாப்பிட்டால் அது ஆரோக்கியத்தை பாதுகாக்குமா? என்றால், அது கேள்விக்குறிதான். அந்த வகையில், ஒருசில உணவு வகைகளை இப்படி சூடு செய்து என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பின்வருமாறு காணலாம்.
1.காளான் :
காளான்களில் காம்ப்ளக்ஸ் ப்ரோடீன்கள் உள்ளது. இதனை ஒருமுறை சமைத்த பின் மீண்டும் சூடேற்றி சாப்பிடுவதால் தீவிரமான பக்க விளைவுகள் உண்டாகும். எனவே உங்கள் வீட்டில் காளான்களை சமைத்தால் அதனை அப்போதே சாப்பிட்டு காலி செய்துவிடுங்கள். மீண்டும் சூடேற்றி சாப்பிடுவது பிரச்சனைகளை உண்டாக்கும்.
2.பசலைக்கீரை :
பசலைக்கீரையில் இரும்புச்சத்து நைட்ரேட்டுகள் அதிக அளவில் உள்ளன. இதை பலமுறை சூடேற்றினால் அதில் உள்ள நைட்ரேட்டுகள், நைட்ரைடுகளாக மாறுவதோடு புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சினோஜென்களாக மாறிவிடும்.இதுவும் ஆபத்தானது தான்.