Categories
லைப் ஸ்டைல்

வெந்நீரை மீண்டும் சூடுபடுத்தாதீங்க…. ஏன் தெரியுமா…? இதை படிச்சி தெரிச்சிக்கோங்க…!!

வெந்நீரை மறுபடியும் நாம் கொதிக்க வைத்து குடிப்பதினால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.

தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பது உடலுக்கு நல்லது என்பது நமக்கு தெரிந்த விஷயம். இந்த வெந்நீர் சிறிது நேரம் கழித்து குளிர்ந்து விடுவதாள் மறுபடியும் குடிப்பதற்காக சூடு பண்ணுகிறோம். தண்ணீரிலுள்ள கிருமிகள் நாம் முதல் முறை கொதிக்க வைக்கும் போதே இறந்து விடும். அப்படி ஒரு முறை காய்ச்சி ஆற வைத்த தண்ணீரை மீண்டும் கொதிக்க வைத்து குடிக்கலாமா? என்பது பற்றி இங்கு காணலாம்.

கொதிக்க வைத்த நீர்:

முதலில் குறிப்பிட்ட நிலையில் கொதிக்க வைத்து பயன்படுத்தி பிறகு மீண்டும் கொதிக்க வைப்பது மிகவும் ஆபத்தானது. பொதுவாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் விஷயம் என்னவென்றால், ஒரு பொருளை ஆறிய பிறகு மீண்டும் சூடு படுத்தினால் தான் நமக்கு நல்லது என்றும் அதனால் தான் ஃபுட் பாய்சன் ஆகாது என்று நினைக்கிறோம். ஆனால் அது சில சமயங்களில் விஷமாக மாறிவிடுகிறது.

நீரில் உள்ள சத்துக்கள்:

பொதுவாக சாதாரண தண்ணீரில் நம்முடைய உடலுக்கு தேவையான மினரல்களும், வாயுக்களும் இருக்கின்றன. அதை நாம் சூடேற்றும் போது அதிலுள்ள சத்துக்கள் வேதியியல் மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடுகின்றன.

நீண்ட நேரம் காய்ச்சுதல்:

தண்ணீரை நன்றாக கொதிக்க வைப்பது நல்லது என்று நாம் நீண்ட நேரம் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தாலோ அல்லது ஆறிய பின் மீண்டும் மீண்டும் காய்ச்சினாலோ உடலுக்கு தேவையில்லாத வேதிப்பொருட்கள் போய் சேரும்.

இப்படி செய்யலாமா?

தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு மீண்டும் அதை தேவையில்லாமல் மறுபடியும் சூடு வைப்பது உங்களுக்கு நீங்களே வைத்து கொள்ளும் ஆப்பு. உதாரணமாக காபியை அடுப்பில் வைத்து சுட வைத்துக் கொண்டிருக்கும் போது, அதில் காபி குறைவாக இருக்கிறது என்று நினைத்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி சுட வைப்போம். அது உங்களுடைய உயிருக்கு உலை வைக்கும் செயல் என்பதை மறந்துவிட வேண்டாம்.

விளைவுகள்:

ஒரு முறை காய்ச்சிய நீரை மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்தால் தண்ணீரில் சேரும் கால்சியம் உப்புக்கள் பித்தப்பையில் சிறுநீரகக் கற்களை உண்டாக்குகின்றன. மேலும் அதிலுள்ள நைட்ரேட்டுகள் நைட்ரோசோம்களாக மாறி கார்சினோஜெனிக் என்னும் விஷப்பொருளாக மாறுவதால் புற்றுநோய், இதய நோய்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

Categories

Tech |