Categories
தேசிய செய்திகள்

“கொரோனா குறித்து அலட்சியம் வேண்டாம்”… பிரதமர் மோடி எச்சரிக்கை…!!

கொரோனா குறித்து மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் கடுமையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 47 லட்சத்தை நெருங்கி போய் கொண்டிருக்கிறது. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 77 ஆயிரத்தைத் தாண்ட உள்ளது. இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொலி மூலமாக நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ஊரடங்கு காரணமாக பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கொரோனா குறித்து மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என எச்சரித்தார்.

தனிநபர் இடைவெளியை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்குமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு  பயன்பாட்டுக்கு வரும் வரை கொரோனாவின் கோர பிடியில் இருந்து மக்களுக்குத் தளர்வு என்பது கிடையாது என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். மேலும் நாட்டின் 5 மாநிலங்களில் கொரோனா பரவல் மிக அதிகளவில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |