Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவால் குணமடைந்தவர் பற்றி ஆய்வு செய்யாதீங்க – அமைச்சர் வேண்டுகோள் ….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர் இருக்கும் இடம் குறித்து ஆய்வு செய்ய வேண்டாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை , திரையரங்குக்கு, மால்கள் , வணிக வளாகங்களை அடைக்க வேண்டும் , மக்கள் அதிகமாக ஒரே இடத்தில் கூட கூடாது என்ற பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. மேலும் மருத்துவ கண்காணிப்புகளையும் தீவிரப்படுத்தி வருகிறது.

தமிழகத்தை பொருத்தவரை 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் ஒரு பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். 1 மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஆய்வுசெய்த சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற காஞ்சிபுரம் பொறியாளர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி விட்டார். காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டார். அவர் இருக்கும் இடம் குறித்து தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டாம் என்று அமைச்சர் தெரிவித்தார். கொரோனாவால் குணமடைந்தவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் அமைச்சர் இந்த கருத்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |