இளம் ஜோடிகள் ஒருவர் தங்களுடைய திருமண நிகழ்ச்சிக்கான செலவுகளை, ஏழை மக்களுக்கு உணவளித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் சேர்ந்த ஒரு திருமண ஜோடி தங்களுடைய ஆடம்பரத் திருமண விழாவை ரத்து செய்துவிட்டு அதற்காக செய்யவிருந்த மொத்த செலவையும் என்ஜிஓ மூலம் “தேங்க்ஸ் கிவ்விங்” தினத்தன்று 200க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு உணவு வழங்கி அசத்தியுள்ளனர். ஜோடிகளின் இந்த செயலானது இல்லினாய்ஸ் மக்கள் மற்றும் நெட்டிசன்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயம் ஏற்பாடு செய்ய இருந்த நிலையில் கொரோனா பிரச்சினை காரணமாக திருமண விழா நினைத்தது போல நடக்க முடியாமல் போனது.
இந்த ஜோடிகளின் பெயர் பில்லி- எமிலி. கொரோனா காரணமாக தங்களுடைய திருமண நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து செய்த இந்த ஜோடி, இந்திய மதிப்பில் 4 லட்சம் ரூபாய் செலவு செய்து ஏழை மக்களுக்கு “தேங்க்ஸ் கிவ்விங்” நாளன்று இலவச உணவு அளித்து அசத்தியுள்ளனர். மேலும் இவர்கள் சிகாகோவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து சீரியசான மனநலப் பிரச்சினை பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுகளை இலவசமாக அளித்துள்ளனர்.
இது குறித்து பில்லி கூறுகையில், “தங்கள் இல்லற வாழ்க்கையை ஆடம்பரமான முறையில் ஆரம்பிப்பதை காட்டிலும், இப்படி ஒரு சிறப்பான முறையில் துவங்குவதை எண்ணிப் பெருமை அடைகிறோம். மேலும், இப்படியான ஒரு மனைவியை பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்னுடைய மனைவி எமிலி மிகவும் புத்திசாலியானவரும், திறமையானவரும் கூட. மக்கள் மீது அக்கறைக் கொண்டுள்ளார்” என்று கூறியுள்ளார் .