வாட்ஸ்அப், பேஸ்புக் மெசஞ்சர் போன்ற செயலிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க கூடாது என ட்ராய் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒடிடி தளங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லாத காரணத்தால், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக ட்ராய் அமைப்பு பதில் அளித்துள்ளது. குறிப்பிட்ட செயலிகளுக்கு ஒப்புதல் கொடுப்பதற்கு முன்னதாக பரிசோதித்து பார்க்கலாம் மற்றும், கண்காணிக்கலாம்.
ஆனால், ஒரு முறை அனுமதி கொடுத்த பிறகு அதன் செயல்பாடுகளில் தலையிடுவது தவறு எனவும் ட்ராய் தெரிவித்துள்ளது., மேலும் கண்காணிப்பை கட்டாயப்படுத்தல் என்பது தகவல்தொடர்பு பயன்பாடுகளின் பாதுகாப்புக் கட்டமைப்பை பலவீனப்படுத்தும் அல்லது சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுக்கும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் வாட்ஸ்-அப், பேஸ்புக் மெசஞ்சர் போன்ற தகவல்தொடர்பு செயலிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.