சென்னை நந்தம்பாக்கத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தகவல் தொழில்நுட்பமாநாட்டுக்கான தொடக்க நிகழ்வு தற்போது நடந்து முடிந்திருக்கிறது. இந்த மாநாட்டை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்து பேசியிருக்கிறார். அதில் சமீபத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. சில நிறுவனங்கள் எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
எனவே ஆட்குறைப்பு செய்யாமலிருக்க தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக , புதிதாக நவீன வகையில் தகவல் தொழில்நுட்பங்களை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தற்போது நடைபெறக்கூடிய இந்த இரண்டு நாள் மாநாட்டில் விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதை ஒரு முக்கிய அம்சமாக எடுத்து விவாதிக்க வேண்டும். அதன் மாநில அரசிடம் கருத்து தெரிவிக்கலாம் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருக்கிறார்.