நாட்டின் முக்கிய கல்வி நிறுவனங்களான ஜாமியா மில்லியா மற்றும் அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகங்களில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி விஷத்தைப் பரப்பி வருவதாகவும், ஓவைஸி போன்ற ஆட்களுக்காகதான் பாகிஸ்தான் போன்ற நாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ஓவைஸியைப் போன்ற பயங்கரவாதிகள் ஜாமியா மில்லியா மற்றும் அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவனங்களில் விஷத்தைப் பரப்பி, தேச துரோகிகள் படையை உருவாக்குகிறார்கள். ஓவைஸி மற்றும் அவரைப் போன்ற அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவர்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்தியர்கள் தற்போது விழித்துவிட்டனர். எங்களை தாழ்த்தவோ பிரிக்கவோ முயற்சிக்காதீர்கள். பாகிஸ்தான் போன்ற நாடுகள் உங்களுக்காகதான் உருவாக்கப்பட்டுள்ளன. எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ओवैसी जैसे कट्टरपंथी जामिया/AMU जैसे शिक्षण संस्थानों में देश के खिलाफ जहर घोल देश के खिलाफ एक देशद्रोही सेना बना रहे है।
ओवैसी और ऐसे पनप रहे संविधान विरोधियो को रोकना होगा।
भारतवंशी अब जग गये है,हमें दबाओ नहीं तोड़ो नही।
तुम्हारे लिए पाकिस्तान बना दिया था अब हमें चैन से जीने दो pic.twitter.com/mSu4PVeiVX— Shandilya Giriraj Singh (@girirajsinghbjp) February 3, 2020
மேலும், ஓவைஸி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, மத்திய அரசை விமர்சித்து மக்களவையில் உரையாற்றும் காணொளி ஒன்றையும் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.