நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள மங்களபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் மணி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் உரம்பு வண்ணான்கடு பகுதியில் விவசாயி ஒருவர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் உரம்பு வண்ணான்காட்டை சேர்ந்த கருப்பண்ணன்(42) என்பவரது வீட்டை அதிரடி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அங்கு மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை காவல்துறையினர் கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சட்ட விரோதமாக துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த கருப்பண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.