Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இதயத்தை திருடாதே மேனேஜர்” பெண்ணின் இதயத்தை திருடி…. கர்ப்பமாக்கி 4 முறை கருக்கலைப்பு…!!

பிரபல சீரியல் மேனேஜர் பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டு 4 முறை கருவை கலைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் வெட்டர்லைன் பகுதியில் வசித்து வருபவர் கலைச்செல்வி(30). இவர் முதுகலை பட்டம் படித்து முடித்து தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜீ தொலைக்காட்சியில் “இதயத்தை திருடாதே” என்ற தொடரின் மேலாளர் ரகு என்பவர் சீரியல் படப்பிடிப்பிற்காக வெட்டர்லைன் பகுதிக்கு வந்தபோது யார் ஆதரவும் இல்லாத கலைச்செல்வியிடம் சீரியலில் நடிக்க வைப்பதாக சொல்லி பேசி மயக்கியுள்ளார். பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று காதல் வளர்த்து, கூடவே கருவையும் வளர செய்துள்ளார்.

பின்னர் சொந்தமாக வீடு வாங்கி விட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறிக்கொண்டே காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதையடுத்து கலைச்செல்வியும்நம்பி  நான்கு முறை கருவை கலைத்துள்ளார். இந்நிலையில் ரகுவிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளது கலைச்செல்விக்கு தெரிய வந்துள்ளது, இது குறித்து விசாரித்தபோது தான், “அவர் ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் இருந்தவர் என்பதும், தன்னை ஏமாற்றி கொண்டிருந்ததும் தெரிந்துள்ளது.

இதுகுறித்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கலைச்செல்வி புகார் கொடுத்துள்ளார். இருப்பினும் ஆதரவற்ற அந்த இளம்பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவில்லை. ரகுவும் தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளார். இதனால் கோபமடைந்த கலைச்செல்வி காவல்நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ஒரு வழியாக காவல்துறையினர் புகாரை பெற்றுக் கொண்டுள்ளனர். மேலும் இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |