மருத்துவ படிப்பிற்கான காலி இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்புவது குறித்த வழக்கு விசாரணை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பிற்காக காலியாக உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி சேர்க்கை வழங்க வேண்டும் என கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தனர். அந்த விசாரணையில், ஆக.31ம் தேதிக்குள் மருத்துவ மேற்படிப்புக்கு மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் நிரப்பாமல் இருக்கும் காலியிடங்களுக்கு தனியாக கலந்தாய்வு நடத்த முடியாது என அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்ட உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை வைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை, மாணவர் சேர்க்கையை நிறுத்தம் செய்ய வேண்டாம் என அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும் எனக் கூறி விசாரணையை செப்.14ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.