தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களுக்கு கட்டவுட் பிளக்ஸ் பேனர் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது .
தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பது மற்றும் வாங்குவதும் குற்றம் என அனைத்து பத்திரிக்கை , செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது . அந்த மனுவில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசியல் கட்சிகள் மிகப்பெரும் அளவில் மக்களை வாகனங்களில் அழைத்து வருகின்றனர் . அதன் வழியாகத்தான் பணமும் அவர்களுக்கு சென்று சேர்கிறது . எனவே பொதுக்கூட்டங்களுக்கு மக்களை மொத்தமாக அழைத்து தொந்தரவு செய்ய கூடாது . தமிழகத்தில் தேர்தல் நடத்தும் பதிகளில் என எங்கேயுமே கட்டவுட் , பிளக்ஸ் போர்டு மற்றும் பேனர் எதுவுமே வைக்க கூடாது ஏனென்றால் சாலையில் நடுவே வைத்து மக்களுக்கு இடையூறு செய்கின்றார்கள் என்று கூறப்பட்டு இருந்தது .
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது . அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகம் முழுவதும் ஏற்கனவே பேனர் மற்றும் பிளக்ஸ்_க்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை சுட்டிக்காட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்துக்கு கட்டவுட் , பிளக்ஸ் போர்டு நிரந்தரமாகவோ அல்லது தற்காலிக வைக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். அதுமட்டுமில்லாமல் அரசியல் கட்சிகளின் பொது கூட்டத்திற்கும், பிரச்சாரத்திற்கு அதிக அளவிலான மக்களை வாகனங்களில் அழைத்துச் செல்வதையும் தடை விதித்து உத்தரவிட்டது . மேலும் அவர்கள் விரும்பினால் தங்கள் சொந்த வாகனத்தில் செல்லலாம் என கூறி இந்த வழக்கு விசாரணையை வரும் 21_ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.