நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்து சீட்டில் மருத்துவர்கள் புரியும்படி, மருந்தின் பெயர்களை பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும் என்று ஒடிசா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பனிகிரஹி, மருந்து சீட்டில் மருத்துவர்கள் புரியாதபடி கிறுக்கல் போன்று எழுதுவதால் நோயாளிகள், மருந்தாளுநர்கள், போலீஸ், நீதிபதிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி கூறியுள்ளார். மேலும் 2016ஆம் ஆண்டு மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தலின் அடிப்படையில் கேப்பிட்டல் லெட்டர் எனப்படும் பெரிய எழுத்துக்களில் மருத்துவர்கள் மருந்தின் பெயரை எழுத வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது பற்றி முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி பனிகிரஹி சுட்டிக்காட்டினார்.மேலும் தெளிவான மருந்தின் பெயரை மருத்துவர்கள் குறிப்பிட்டு எழுதுவதால் தேவையில்லாத பரிசோதனைகள், தவறான மருந்து பயன்பாடு குறையும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.