Categories
உலக செய்திகள்

உங்க விளம்பரத்துக்காக கமலா ஹாரிஸ் பெயரை பயன்படுத்தாதீங்க… வெள்ளை மாளிகை அறிவுறுத்தல்…!

கமலா ஹாரிஸின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று மீனா ஹாரிஸிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் நின்று கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று துணை அதிபராக பதவியேற்றுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாகவும் திகழ்கிறார். இந்நிலையில் கமலா ஹாரிஸின் மருமகளான மீனா ஹாரிஸ் சில நாட்களாக தனது பதிவுகளில் கமலா ஹாரிஸின் பெயரை பயன்படுத்தி வருகிறார்.

இதனால் அவருக்கு வெள்ளை மாளிகை ஒரு அறிவிப்பை தெரிவித்துள்ளது. அதில், உங்களை பிரபலப்படுத்திக் கொள்ள கமலா ஹாரிஸின் பெயரை சமூக வலைதளங்களிலும், வணிக ரீதியாகவும் பயன்படுத்தவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு முன்னர் விவசாயிகளுக்கு ஆதரவாக மீனா ஹாரிஸ் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |