அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என அமெரிக்க அரசு கூறியுள்ளது.
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை என்பது தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பல நாடுகளும் முயற்சி செய்து வருகின்றன. மேலும் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே அனைத்து நாடுகளும் தடுப்பூசிகள் போடுவதை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. நாட்டு மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்கள் முக கவசம் அணிய தேவையில்லை என அமெரிக்க அரசு கூறியுள்ளது. மேலும் 6 அடி தூர சமூக இடைவெளியை கடைபிடிக்க தேவையில்லை எனவும் கூறியுள்ளது. பாடல் கூட்டம் தெரிந்த பகுதிகளான மருத்துவமனைகள், விமான நிலையங்கள், சிறைச்சாலைகளில் தொடர்ந்து முக கவசம் அணிய வேண்டும் என கூறியுள்ளது.