ஆன்லைன் மூலமாக மொய் பணம் செலுத்தும் முறை மதுரையில் நடந்த திருமணம் ஒன்றில் அரங்கேறியுள்ளது.
காலங்காலமாக திருமண நிகழ்ச்சிகள், மற்றும் மற்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சென்று விட்டு மோய் செய்துவிட்டு வருவது வழக்கம். மோய் பணத்தை ஒரு நோட்டு போட்டு எழுதி வைப்பார்கள். இந்த பழக்கம் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. “கல்யாணத்துக்கு போறோமோ இல்லையோ ஆனா மொய் நோட்டுல நம்ம பெரு இருக்கணும்” இந்த வார்த்தையை சொல்லும் தமிழ்நாட்டில் மொய் பணம் எந்த அளவுக்கு முக்கியம் என்று இதன் அடுத்த கட்டமாக மதுரையில் நடந்த திருமணம் ஒன்று எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
அதில் மொய் வைக்கும் இடம், திருமண பத்திரிக்கை ஆகியவற்றில் கூகுள்-பே, போன்-பே போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் மொய் செலுத்தும் வசதி செய்யப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.