லில்லி அரவிந்த் ஆகிய இருவரும் கணவன் மனைவி ,லில்லிக்கும் அரவிந்த்க்கும் கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆனது லில்லி நல்ல பொண்ணுதான் ஆனால் அடிக்கடி இல்லாமையை பற்றி பேசுவாள் அரவிந்த் வேலைக்குச் சென்று வீடு திரும்பியபின் வந்ததும் லில்லி பருப்பு இல்லை எண்ணெய் இல்லை காய்கறி இல்லை உப்பு இல்லை எனக் கூறிக் கொண்டே இருப்பார்கள்
இது அரவிந்திற்கு கஷ்டத்தை ஏற்படுத்தியது .வருடத்தின் கடைசிநாள் இன்று ஒரு நாள் எப்போதுமே இல்லை இல்லை சொல்லி பழகாதே லில்லி கடவுள் நமக்கு நிறைய கொடுத்திருக்கிறார் இருக்கு இருக்கு என்று சொல்லிப் பார் இந்தப் புதுவருடத்தில் இருந்து இதனை பின்பற்று தீர்மானம் எடு என்றார் அரவிந்த் லில்லியும் தீர்மானத்தை பின்பற்றினால் எப்படி என்றால் புதிய வருடத்தில் லில்லி இல்லை என சொல்வதை நிறுத்தி விட்டாள்
என்னங்க பருப்பு டப்பா காலியா இருக்கு புளி டப்பா காலியாக இருக்கு சீரக டப்பா காலியாக இருக்கு என சொன்னாள் அவள் இருக்கு என்று சொன்னாள் ஆனால் மீண்டும் இல்லாமையை குறிப்பிட்டு தான் சொன்னால் நாம் கூட தான் சில தீர்மானங்கள் எடுக்கிறோம் அதை அர்த்தத்துடன் பின்பற்றுகிறோம் என்றால் நிச்சயமாக இல்லை
நாம் எடுக்கும் தீர்மானத்தை தெளிவாக புரிந்துகொண்டு பயனுள்ள வகையில் பின்பற்றுவது தான்நல்ல தீர்மானம் எடுக்க வேண்டும் அதை சரியாக பின்பற்ற வேண்டும்இல்லாமை நினைப்பதை விட இருப்பதை வைத்து சந்தோசமாக வாழ ஆசைப்படுங்கள்அதுதான் மிகுந்த சந்தோசத்தை தரும்
நினைத்த செயலை அடைய விரும்பினால் தெளிவான முடிவு எடுத்து பின்பற்ற வேண்டும் நினைத்த உடன் எல்லாம் நடந்துவிடுவதில்லை .செய் அல்லது செத்து மடி .