படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் மத்திய அரசு வெளியிட்டுள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு வசதிகள் கட்டுக்குள் இருக்கின்றன. இதனடிப்படையில் சினிமா துறைக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறுப்பட்ட தொழிலாளர்கள் பாதிப்படைந்திருகின்றனர். இந்த நிலையை போக்குவதற்காக சினிமா துறையினர் மத்திய மற்றும் மாநில அரசிடம் மனு கொடுத்து படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரினர்.
அந்த வகையில் மத்திய அமைச்சர் ஜவடேகர் இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அந்த அறிவிப்பில் மத்திய அரசு கொடுக்கும் வழி மறைகளை பின்பற்றினால் மட்டும் படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்படும் என கூறினார். மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளாவன:
- பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது
- ஆறடி சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
- குறைந்த வேலையாட்களை மட்டும் வைத்து படப்பிடிப்பு மேற்கொள்ளவேண்டும்.
- மாஸ்க் அணிந்து கைகளை அடிக்கடி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். எச்சில் துப்பக்கூடாது.
- மை போன்ற உபகரணங்களை பயன்படுத்திய பின் அதனை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
- நடிக்கும் பொழுது தவிர மற்ற நேரங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
- விக், உடைகள், ஆபரணங்கள் போன்ற ஒப்பனை பொருட்களை பகிர்ந்து கொள்வதை முடிந்த அளவு தவிர்த்தல் அவசியம்.
- கையுறை பயன்படுத்த வேண்டும்.
- ஒப்பனைக் கலைஞர்கள் பாதுகாப்பு உடை அணிதல் அவசியம்.
- வெளியில் சென்று படப்பிடிப்பு நடத்துவதாக இருந்தால் அங்கு கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
இத்தகைய வழிமுறைகளை பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும் என மத்திய அரசு மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.