தேவையான பொருட்கள் :
மிளகு – 10
சீரகம் – 1/4 ஸ்பூன்
ஏலக்காய் – 2
கிராம்பு – 4
ஓமம் – 1/4 ஸ்பூன்
இஞ்சி -சிறிது
துளசி இலை – 5
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கருப்பட்டி – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் மிளகு ,சீரகம் ,ஏலக்காய் சேர்த்து இடித்துக் கொள்ள வேண்டும் . பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கிராம்பு , இஞ்சி , ஓமம் , துளசி , மஞ்சள் தூள் , கருப்பட்டி சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டி தினமும் இரவில் குடித்து வந்தால் சளி ,காய்ச்சல் ,இருமல் விரைவில் குணமாகும் .