Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படியா செய்வீங்க….! மனசாட்சி இல்லையா ? சிக்கி கொண்ட திமுக கூட்டணி …!!

திமுக தலைமையிலான கூட்டணி இப்படியெல்லாம் விமர்சனம் செய்யலாம் என்று அதிமுகவுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 22 ஆயிரத்து 333 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு, 12,757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே போல 176 பேரின் உயிரரை பறித்த கொரோனா தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதன் தாக்கத்தை  ஏற்படுத்தி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதிக பரிசோதனை:

தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளை பல்வேறு வகையில் மேற்கொண்டு வருகிறது. நாட்டிலேயே அதிகமான பரிசோதனை செய்த மாநிலங்களில் தமிழகம் முதன்மை இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 4,91,962 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது தான் நாட்டிலேயே ஒரு மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிக பரிசோதனை ஆகும்.

குறைந்த இறப்பு வீதம்:

அதிகமான கொரோனா பரிசோதனை மையத்தை பெற்றுள்ள தமிழகம் அதிகமானோரை குணப்படுத்திய மாநிலங்கள் வரிசையில் நாட்டிலே இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இப்படி பல வகைகளில் தமிழகம் கொரோனா தடுப்பு சிகிச்சையை சிறப்பாக மேற்கொள்கிறது. இதன் விளைவாகவே உயிரிழப்பு 0.78 சதவிகிதம் ( நாட்டிலேயே குறைந்த அளவு) இருப்பது பலரின் பாராட்டையும் பெற வைத்துள்ளது.

குவிந்த பாராட்டுக்கள்:

அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள தமிழகம் குறைந்த அளவு இறப்பு வீதத்தை கொண்டுள்ளது தமிழக மக்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தை இந்திய மருத்துவ கழகம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், உலக சுகாதார நிறுவனம் உட்பட  பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். ஆனால் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது தமிழக அரசை பல்வேறு வகைகளில் விமர்சிக்க வழிவகை செய்துள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

பூதக்கண்ணாடி போட்ட திமுக:

கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலிலேயே அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எதிர்கட்சியான திமுக விமர்சனம் செய்து வந்தது. பரிசோதனை கருவிகள் வாங்கியதில் ஊழல், மதுக்கடைகள் திறப்புக்கு கண்டனம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம் என்று ஏராளமான விமர்சனங்களை முன்வைத்து கொண்டே இருந்தது. தமிழக முதல்வர் கூட, எதிர்க்கட்சி அது சரியில்லை இது சரியில்லை என்று தேடித்தேடி விமர்சித்து வருகிறது என குறிப்பிட்டிருந்தார். அமைச்சர்களும் திமுக பூதக்கண்ணாடி போட்டு தேடி அரசை விமர்சிக்கின்றது என்று தெரிவித்திருந்தனர்.

இப்படி ஒரு விமர்சனமா ?

இந்தநிலையில் தான் மீண்டும் அதே போல ஒரு விமர்சனத்தை திமுக வைத்துள்ளது. அதுவும் ஒட்டு மொத்த திமுக கூட்டணியே தீர்மானம் போட்டுள்ளது. இதனை புரிந்துகொண்டுள்ள ஒவ்வொருவருக்கு இப்படியெல்லாம் விமர்சிக்க முடியுமா ? இப்படியெல்லாம் குறைகளை கண்டறிய முடியுமா ? இப்படியெல்லாம் விமர்சிப்பது நியாயம் தானா என்ற வகையில் கேள்விகள் நிச்சயம் எழும்.

திமுக கூட்டணி – தீர்மானம்:

நேற்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 11 கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானத்தில் இந்திய நாட்டிலேயே அதிக உயிரிழப்பை தமிழகம் சந்தித்துள்ளது எனவும், அதிமுக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டது எனவும் தீர்மானம் வாயிலாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிக உயிரிழப்பு:

நாட்டிலேயே அதிக உயிரிழப்பா ? என்று நாம் பார்க்கும் போது அரசியல் நுட்பமாக வார்த்தைகளை கையாண்டு அதிமுக அரசை திமுக விமர்சித்துள்ளது தெரியவந்துள்ளது. அதில் தென்மாநிலங்களில் அதிகமாக உயிரிழப்பை சந்தித்த மாநிலம் தமிழகம் என்ற வார்த்தையை குறிப்பிட்டு தனது விமர்சனங்களை முன்வைத்து ஆளும் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது திமுக கூட்டணி. தமிழக அரசு செய்யும் நடவடிக்கைகளை பாராட்டாமல் இருந்தாலும் பரவாயில்லை. அதற்காக இப்படியெல்லாம் விமர்சிப்பதா என அதிமுகவினர் வேதனையில் இருக்கின்றனர்.

முகம் சுளிக்க வைத்த விமர்சனம்:

நாடு முழுவதும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் கூட தமிழகத்தைப் போல சிறப்பாக சிகிச்சை அளிக்கவில்லை. தமிழகத்தைப் போல இறப்பு விகிதத்தை குறைக்க வில்லை, தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.78% என அனைவரும் பாராட்டும் வகையில் இருந்தும் கூட பாராட்ட மனம் இன்றி திமுக கூட்டணி இந்த மாதிரியான ஒரு விமர்சனம் செய்வது ஆளும்கட்சி மட்டுமல்லாமல், தமிழக மக்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. அரசியல் செய்ய வேண்டியது அரசியல் கட்சியின் கடமை தான், ஆனால் இப்படி ஒரு சூழ்நிலையில், இந்த மாதிரியான ஒரு காலகட்டத்தில், எப்படி விமர்சிக்கலாம் ? என்று வார்த்தைகளை தேடி பிடித்து குறைகள் இருக்கிறது என்பதை கண்டறிந்து விமர்சித்த திமுகவின் அரசியல் அம்பலமாகி உள்ளது.

வர இருக்கும் தேர்தலுக்கான அரசியல்:

நாட்டிலே சிறப்பான சிகிச்சை அளித்து வருவது தமிழ்நாடு தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. குறைவான இறப்பு  வீதத்தை பெற்று பல மாநிலங்கள் தமிழகத்தை பார்த்து வியப்படையும் நிலையில் தென் மாநிலத்தில் அதிக மரணம் என்ற வார்த்தையை பயன்படுத்தி ஆளும் அதிமுக அரசை விமர்சனம் செய்துள்ளார் என்றால் அடுத்த வருடம் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் தயாரிப்பாக கூட இருக்கலாம் என பலரும் கருதுகின்றார்கள்.

Categories

Tech |