Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன வேண்டுமோ உடனே செய்யுங்க… அமைச்சருக்கு உத்தரவு போட்ட எடப்பாடி… குஷியில் அதிமுகவினர் …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியிடம் உடல்நலம் விசாரித்தார்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் சிக்கலாக உள்ளது. அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் கொரோனாவின் வீரியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு குணமடைந்தார் வீடு திரும்பியவர்களின் அளவும் இருப்பதால் சற்று நிம்மதியான சூழல் நிலவிவருகிறது. இருந்தாலும் தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனாவால் உயிர்களின் எண்ணிக்கை 400 நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சேப்பாக்கம் சட்டமன்ற திமுக உறுப்பினர் ஜெ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மரணமடைந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது மற்றுமொரு எம்எல்ஏவாக அதிமுகவின் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா தொற்றுக்கு ஆளான அதிமுக எம்எல்ஏ பழனி மீண்டு வரவேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில்தான் இன்று காலை 10 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற உறுப்பினர் பழனியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

உடல்நிலையை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு முதல்வர்  அறிவுறுத்தி இருப்பதாகவும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக செய்யுமாறும் முதலமைச்ச அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. அப்போது சட்டமன்ற உறுப்பினர் பழனி நான் நலமாக இருப்பதாக தெரிவித்ததுடன் முதலமைச்சருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |