Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு வேலைவாய்ப்பு

உங்களுக்கு தகுதி இருக்கா ? ”பிசிசிஐ_யில் வேலை” கெத்தான வாழ்க்கை …!!

இந்திய அணியைத் தேர்வுசெய்யும் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கான புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத், தேர்வுக்குழு உறுப்பி9னர் ககன் கோடா ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனை சில நாள்களுக்கு முன்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதிப்படுத்தினார். இதனால் இந்திய அணியைத் தேர்வுசெய்யும் புதிய தேர்வுக்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிசிசிஐ அறிவிப்பு

அதில், ”மகளிருக்கான அனைத்து உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்து, அனைத்து உறுப்பினர்களும் புதிதாக தேர்வு செய்யப்படவுள்ளனர். சீனியர் ஆடவர் அணிக்கு இரண்டு இடங்களுக்கும், ஜூனியர் ஆடவர் அணிக்கு இரண்டு இடங்களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கு ஜனவரி 24ஆம் தேதி கடைசி நாள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தேவையான தகுதிகள்:

மகளிர் சீனியர் அணி: *நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடியிருக்க வேண்டும்.

*ஓய்வுபெற்று 5 வருடங்கள் ஆகியிருக்கவேண்டும்.

தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கான தகுதிகள்

ஆடவர் ஜூனியர் அணி: *25 முதல்தர போட்டிகளில் பங்கேற்றிருக்கவேண்டும்.

* ஓய்வுபெற்று 5 வருடங்கள் ஆகியிருக்கவேண்டும்.

தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கான தகுதிகள்

ஆடவர் சீனியர் : *7 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கவேண்டும்.

*30 முதல்தர போட்டிகள் அல்லது 10 ஒருநாள் போட்டிகள், 20 முதல்தர போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கான தகுதிகள்

Categories

Tech |