சிக்கனை விரும்பி சாப்பிடுவார்கள் அதிக அளவில் இருக்கின்றர். இதை தினமும் பலரும் உண்டு வருகின்றனர். என்னதான் சிக்கனில் புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் நிறைந்து இருந்தாலும் எதையும் அளவோடு சாப்பிட்டால் தான் அவற்றின் பலனை நம்மால் முழுமையாக பெற முடியும். அதனால் உடல் பாதிப்புகளுக்கும் நம்மால் ஏற்படும். இப்போது தினமும் சிக்கனை ஏன் சாப்பிட கூடாது என்பதற்கான காரணம் இப்போது பார்க்கலாம்.
அதிக புரோட்டீன் கிடைக்கும்:
ஒருவருடைய உடல் தினசரி உணவில் இருந்து 10 முதல் 15 சதவீதம் ரோட்டில் கொண்டிருக்க வேண்டும். அதிக அளவில் புரோட்டின் சேரும் போது உடலில் கொழுப்புகள் தேங்கி விடுகின்றன. இதனால் உடல் எடை அதிகரிக்கும். தினமும் ஒரு பெரிய துண்டு சிக்கனை சாப்பிடுவதால் தினமும் கிடைக்கவேண்டிய புரோட்டீனை விட அதிகமாக கிடைப்பதால் உடல் எடை அதிகரிக்கிறது.
இதய நோயின் அபாயம் அதிகரிக்கும்:
சிக்கன் போன்ற இறைச்சி உணவுகளை சாப்பிடும் போது உடலில் கொழுப்புகள் அளவு அதிக அளவு அதிகரிப்பதால் இதயநோய் அபாயத்தை அதிகரிக்கும்.
எடையை பராமரிப்பதில் சிக்கல்:
சிக்கன் போன்ற இறைச்சி அதிகமாக சாப்பிடும் போது ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது கடினம் ஆகும். இறைச்சி சாப்பிடுபவர்களை விட சைவம் சாப்பிடுபவர்கள் குறைந்தளவு பிஎம்ஐ கொண்டுள்ளனர் என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.