சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்ற சசிகலாவுக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்பாக அதிமுகவை ஒன்றிணைப்பேன் என சொன்னீங்க. நாளுக்கு நாள் விரிசல் அதிகமாக இருக்கின்றது. நீங்க சொன்னது நடக்குமா என்பது குறித்த கேள்விக்கு சசிகலா,
இப்பவும் அது தான் சொல்கின்றேன். நிச்சயமாக நடக்கும். நாங்கள் ஒன்றாக நிற்க முடியும். காரணம் அவங்க வந்து தனித்தனியாக செயல்படுகிறார்கள் ? என்னைப் பொருத்தவரைக்கும், அப்படி இல்லை. நான் எப்ப பெங்களூரில் இருந்து வெளியே வந்தனோ.. அன்னைக்கு என்ன சொன்னேனே ? அதேதான் இப்பயும் சொல்றேன். எல்லோரும் ஒன்றிணைந்து, நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி அடைவோம்.
நீங்க முதலமைசர் ஆகியவர்கள் இன்னைக்கு விசுவாசமாக இல்லையே என்ற வருத்தம் இருக்கா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த சசிகலா,
ஒன்னு வச்சுக்கோங்க. எல்லோருடைய மனதும் ஒரே மாதிரி இருக்காது. நீங்க இப்போ என்ன கொண்டு போயி எந்த இடத்தில ? எந்த உயரத்தில் உட்கார வச்சீங்கனாலும், நான் என்னோட பாதத்தை பார்த்து தான் நடப்பேன். அதனால ஒவ்வொருடைய மனசிலும், செயல்பாடு மாறும்போது நீங்களும் ஒன்னு செய்ய முடியாது. நானும் ஒன்று செய்ய முடியாது.