நகம் கடிப்பதால் என்ன பிரச்சினை ஏற்படும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
நகம் கடிக்கும் பழக்கம் என்பது மிகவும் மோசமானதுஆகும். இந்த பழக்கமானது சிறு வயதில் தான் அதிக அளவில் இருக்கும். அதை சிறுவயதிலேயே நிறுத்திவிட்டால் பிற்காலத்தில் பிரச்சினை ஏற்படுவதை தடுக்கலாம். நகம் கடிக்கும் பழக்கம் இருப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னவென்று பார்க்கலாம்.
நகம் கடிப்பதால் உடலில் பாக்டீரியா தொற்று கட்டுப்படுத்த இயலாமல் அதிகரிக்கும். இதனால் உறுப்புகள் செயலிழந்து விடும்.
இதற்கான முறையான சிகிச்சை அளிக்காமல் இருந்தால் செப்ஸிஸ் தொற்று ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும். சுவாசத் துடிப்பு அதிகரித்தல், மூச்சு விட சிரமம், சரும பாதிப்ப, குழப்பம், வயிற்றுவலி போன்றவை ஏற்படும்.
அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் சுமார் 1.5 மில்லியன் மக்கள் செப்சிஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயது முதிர்ந்தவர்களுக்கு அதிகமாக தொற்றும் அபாயம் உள்ளது.
நகம் கடிப்பதால் வரும் செப்சிஸ் நோய் பற்றி யாருக்கும் தெரியாது. அதற்கான அறிகுறிகள் பற்றிய எந்த ஒரு தகவலும் கிடைப்பதில்லை. இந்த நோய் எந்த வயதினரையும் தாக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.