டெங்கு மலேரியா சிக்குன்குனியா போன்ற நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உள்ள கட்டிட உரிமையாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் மாநகராட்சி குழுவினர் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். கொசு உற்பத்தியாகும் சூழலில் உள்ள கட்டிட உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். என்னுடைய மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் திருத்தப்பட்ட அபராதத் தொகை கடந்த 16ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்க வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அபராதம் என்பது குடியிருப்புகள் தொடங்கி வணிக நிறுவனங்கள் பள்ளிக்கூடம் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. சரியான முறையில் பராமரிப்பு செய்யாமல் இருந்த அரசு தனியார் வணிக வளாக கட்டிடங்களுக்கு சென்னை நகராட்சி நிர்வாகம் தரப்பில் மட்டும் சுமார் 45 லட்சம் அபராதமும் தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் சார்பில் ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.