Categories
லைப் ஸ்டைல்

தொடர்ந்து வறட்டு இருமல் இருக்கா…? தீர்வு இதோ…!!

தொடர்ந்து சளி மற்றும் வறட்டு இருமலால் கஷ்டப்படுவர்களுக்கு இஞ்சி நிரந்தர தீர்வாக இருக்கிறது.

இஞ்சியை நாம் உணவில் அதிகம் சேர்ப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. வாரத்துக்கு ஒருமுறை இஞ்சி கஷாயம் செய்து குடித்து வந்தால் நல்லது. இந்த குளிர்காலத்தில் சளி, இருமல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் வருவது வழக்கம். இதற்கு நிரந்தரத் தீர்வாக இஞ்சி இருக்கிறது. இஞ்சி வறட்டு இருமலை தீர்க்க கூடியது.

ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து கொள்ளவும். அதில் சிறிதளவு உப்பு கலந்து சில நிமிடங்களுக்கு வாயில் போட்டு நன்கு மெல்லவும்.

இவ்வாறு இஞ்சியை சேர்த்துக் கொண்டால் சளி இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

இஞ்சியுடன் கொஞ்சம் மஞ்சள் மற்றும் தேன் சேர்த்து சாப்பிடலாம்.

Categories

Tech |