சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு சமந்தா பதிலளித்து வந்தார்.
தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் நடிப்பில் யசோதா, சகுந்தலம் போன்ற திரைப்படங்களும் ரிலீசாக காத்திருக்கிறது.
இதனையடுத்து யசோதா படத்திற்காக 3 கோடி செலவில் செட் போடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு சமந்தா பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், ”நம்பர்-1 நடிகையாகும் ஆசை உங்களிடம் உள்ளதா?” என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சமந்தா, ”அப்படி ஒரு ஆசை எனக்கு இல்லை எனவும், மேலும் நல்ல படங்களில் நடித்து நல்ல நடிகையாக இருக்க வேண்டும் என ஆசை இருக்கிறது” என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.