பெயரை மாற்றிக் கூறிய டொனால்ட் ட்ரம்ப்_பை கிண்டல் செய்யும் விதமாக தன்னுடைய பெயரை மாற்றியுள்ளார் ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கலந்து கொண்ட நிகழ்ச்சியில்ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக்_கும் பாங்கேற்றார். இதில் டொனால்டு ட்ரம்ப் பேசியபோது டிம் குக் என்ற பெயரை குக் ஆப்பிள் என்று மாற்றிக்கூறினர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது . நெட்டிசன்கள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்_பை கிண்டல் செய்யும் விதமாக மீம்ஸ் செய்து வந்தனர்.
இதையடுத்து ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக்_க்கு தன்னுடைய பெயரை மாற்றியுள்ளார். அவருடைய ட்வீட்_டர் பக்கத்தில் அவரின் பெயருக்கு அருகில் ஆப்பிள் நிறுவனத்தின் லோகோ_வை வைத்துள்ளார் . இந்த போட்டோ மற்றும் மீம்ஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.