தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி போன்ற பாடல்கள் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில், நடிகர் விஜய் குறித்து கணேஷ் வெங்கட்ராமன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் மொபைல் போனை பயன்படுத்த மாட்டாராம். ஒரு நாற்காலியில் அமர்ந்து சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருப்பாராம். இவ்வாறு கணேஷ் வெங்கட்ராமன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.