Categories
கல்வி

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணம்…. எவ்வளவு வசூலிக்க வேண்டும் தெரியுமா….? தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் தனியார் கல்லூரிகள் அதிக அளவில் கட்டணம் வசூலிக்க கூடாது என்பதற்காகவும், அதிக கட்டணத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காகவும் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் சுகாதாரத்துறை செயலாளர்கள் அடங்கிய ஒரு குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழு தனியார் கல்லூரிகள் முன்மொழியும் கட்டணத்தை ஆய்வு செய்து அது நியாயமானதாக இருக்கிறதா என்பதை பரிந்துரை செய்யும். அதோடு கட்டணங்கள் நியாயமாக இருந்தால் அதை அங்கீகரிப்பது மற்றும் ஆலோசனைகளையும் வழங்கும். இந்த குழு நடப்பாண்டுக்கான தனியார் மருத்துவ கல்லூரிகளின் கட்டணத்தை இறுதி முடிவு செய்து அதற்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி கல்வி கட்டணமானது ஆசிரியர்களின் சம்பளத்தையும் அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குழு நியமித்த கட்டணத்தை விட ஒரு ரூபாய் கூட அதிகமாக வசூலிக்கக்கூடாது எனவும் அரசு எச்சரித்துள்ளது. ஒருவேளை தனியார் கல்லூரிகள் கட்டணத்தை உயர்த்தலாம் என்று நினைத்தால் கமிட்டியை அணுகி பேசலாம். இந்நிலையில் தற்போது 18 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டண வரமுறையானது நிர்ணயிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 4,50,000 ரூபாயும், மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயும், என்ஆர்ஐ மாணவர்களுக்கு 24 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், என்ஆர்ஐ Lapsed ஒதுக்கீடு இடங்களுக்கு 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மாணவர்களிடம் கல்லூரி வளர்ச்சிக்கான கட்டணத்திற்கு 40,000 ரூபாய் வரை வாங்கிக் கொள்ளலாம். இதனையடுத்து மேற்குறிப்பிட்ட கட்டணத்தில் உணவு, விடுதி கட்டணம் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் போன்றவைகள் அடங்காது. மேலும் மேற்குறிப்பீட்ட விதிமுறைகளை மீறி கல்லூரிகள் செயல்பட்டால் கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவது கல்லூரிகளின் உரிமமும் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |