காட்பாதர் படத்திற்காக நயன்தாரா 4 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தற்போது அஸ்வின் சரவணன் இயக்கும் ”கனெக்ட்” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். இதனையடுத்து, இவர் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ”காட்பாதர்” திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், இந்த தெலுங்கு படத்திற்காக நயன்தாரா 4 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தெலுங்கில் ஒரு படத்திற்காக கதாநாயகிக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச சம்பளம் இதுதான் எனவும் கூறப்படுகிறது.