Categories
உலக செய்திகள்

பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா….? வெறும் 1 ரூபாய்…. இது வேற மாறி…!!

உலகிலேயே பெட்ரோல் விலை ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டு நாடு எது என்று இப்போது பார்க்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மிக மோசமான நிலையை அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். நகரங்களில் ஒரு சில பகுதிகளில் பெட்ரோல் 100 ரூபாய் தொட்டுள்ளது. மேலும் பெரும்பாலான பகுதியில் 90 ரூபாய்க்கு மேல் உள்ளது. இது மட்டுமல்லாமல் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும் அனைத்து நாடுகளிலும் மற்றும் பல்வேறு உலக நாடுகளிலும் பெட்ரோல் விலை மிகக் குறைவான விலையில் இருக்கிறது.

இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாள,ம் பூடான் ஆகிய நாடுகளில் இந்தியாவைக் காட்டிலும் பெட்ரோல் விலை குறைவாகவே இருக்கிறது. இதிலும் பூடானில் விலை மிக குறைவு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை பாகிஸ்தானில் 51.14 இலங்கையில் 60.26, வங்கதேசத்தில் 76.41 நேபாளத்தில் 68.98, பூட்டானின் 49.56, வெனிசுலா நாட்டில் தான் உலகிலேயே மிகக் குறைந்த விலையில் பெட்ரோல் விலை இருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இங்கு வெறும் 1.45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஈரானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 4.5 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Categories

Tech |