‘மாநாடு’ படத்துக்காக கல்யாணி பிரியதர்ஷன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், நவம்பர் 25ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் 25 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.