ஏற்றம் இறக்கமாக உள்ள தங்கத்தின் விலை இன்று மட்டும் 136ரூபாய் உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் உயர்ந்து காணப்படுகிறது. அதாவது சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் 4,947 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 39,576 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.
இந்தநிலையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 17 ரூபாய் உயர்ந்து 4,964ஆகவும், ஒரு சவரன் தங்கம் 136 ரூபாய் உயர்ந்து 39,712 ரூபாயாகவும் விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. அதாவது ஒரு கிலோவுக்கு 2,300 ரூபாய் உயர்ந்து 76 ஆயிரத்து 700 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.