Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா முதன்முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…..? அதுவும் இந்த வேலைக்கு….!!!

சமந்தா தான் வாங்கிய முதல் சம்பளம் குறித்து சமூக வளைதளத்தில் பேசியுள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. விவாகரத்துக்கு பிறகு இவர் தற்போது படங்கள் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் சகுந்தலம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Actress Samantha in Latest Photo

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் ”உங்களின் முதல் சம்பளம் எவ்வளவு?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சமந்தா, தான் முதன்முதலாக 500 ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறினார். மேலும், அது ஹோட்டலில் தொகுப்பாளராக பணிபுரிந்தபோது வாங்கியதாகவும் கூறினார்.

Categories

Tech |