தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் சட்டமன்ற தேர்தல் என்பதால் பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழியிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் உங்களுக்கு சமைக்க தெரியுமா? என்று கேட்டுள்ளார். அதற்கு இந்த கேள்வியை ஏன் ஆண்களை பார்த்து கேட்பதில்லை என்று திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார். அவர்களைப் பார்த்து ஏன் இந்த கேள்வி கேட்பதில்லை? என் தந்தை முதல்வராக இருந்தவர் தான். அவரிடம் இந்த கேள்வி கேட்டதில்லையே? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.