தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, குஷ்பூ, சங்கீதா, மீனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜயின் நெருங்கிய நண்பரான சஞ்சீவி மனைவி பிரீத்தி விஜய்க்கு பிடித்த உணவுகள் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதாவது விஜய்க்கு பிரியாணி, குலோப் ஜாமுன் மற்றும் மட்டன் கீமா ஆகிய மூன்று உணவுகள் தான் மிகவும் பிடிக்குமாம். மேலும் நடிகர் சஞ்சீவ் மற்றும் விஜய் கல்லூரி படிக்கும் போது இருந்தே நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.