Categories
லைப் ஸ்டைல்

உங்கள் இதயத்தின் வயது தெரியுமா…? இப்படி கணக்கிடலாம்…. வயது குறைவா இருந்தா…. இதை கட்டாயம் பண்ணுங்க…!!

இதயத்தின் வயதை கணக்கிடுவது மற்றும் ஆரோக்யமான இதயத்தை பெறுவது குறித்த தொகுப்பு.

உங்களுடைய இதயத்தின் வயதும், உங்களுடைய சாதாரண வயதும் சமமானதா? என்று அமெரிக்கர்களிடம் கேட்டபோது பல அமெரிக்கர்கள் அதற்கு இல்லை என்ற பதிலையே கூறினர். இதற்கு இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் காரணமாக உள்ளதால் தற்போது நம்முடைய இதயங்கள் வயதாகி வருகின்றனர். எனவே இதயத்தின் வயதும் நம்முடைய சாதாரண வயதும் மாறுபடுகின்றன.

உங்கள் இதயத்தின் வயதை எப்படி கணக்கிடலாம்?

அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாட்டு தடுப்பு மையங்கள் இதயத்தின் வயதை கணக்கிட சில எளிதான முறைகளைப் பின்பற்றுகின்றனர். அதன்படி உடல் நிறை குறியீட்டு (பிஎம்ஐ) பாலினம், ரத்த அழுத்த அளவு, புகை பிடித்தல் பழக்கம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றை கொண்டு கணக்கிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒருவருக்கு 30 வயது என வைத்துக்கொள்வோம் அவருக்கு புகைப்பழக்கம் தேனீர் பழக்கம் எதுவுமே இல்லை, நீரிழிவு நோயும் இல்லாதவராகவும் இருக்கும்போது அவருக்கு பிஎம்ஐ 22.5 என்றால் அவருடைய இதயத்தின் வயது 28. அதாவது அவரை விட அவருடைய இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது.

உயர் ரத்தஅழுத்தம்:

45 வயதான ஒருவர் 126 மில்லிமீட்டர் ரத்தத்தை கொண்டு இருப்பவராக இருந்தால், அவருக்கு  உயர் ரத்த அழுத்தம் இல்லை, மேலும் அவர் புகை பிடிக்காதவர். ஆனால் அவருக்கு நீரிழிவு நோய் இருப்பதால் 38 பிஎம்ஐ கொண்டுள்ளார் என்றால் அவருடைய இதயத்தின் வயது 52. அவரை விட அவருடைய வயது இதயம் வயதானதாக இருக்கிறது.

உயரமும் எடையும்:

மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற நோய்களை கொண்டும் ஹார்ட் கால்குலேட்டர் இதயத்தின் வயதை கணக்கிடுகிறது. முதலில் இதய வயது கால்குலேட்டர் பயன்படுத்த பிஎம்ஐ கணக்கிட வேண்டும். பிறகு உயரம் மற்றும் எடையை கொண்டு இதனை அறியலாம்.

இளமையான இதயத்தை பெறுவது எப்படி?

ஆரோக்கியமான உணவு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான எடை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் ஆரோக்கியமான இதயத்தை பெற முடியும். மேலும்  இதற்கு உடற்பயிற்சி செய்தல், புகைபிடிக்கும் பழக்கம் கைவிடுதல், குறைந்தது 9 மணி நேரம் தூக்கம் ஆகியவை அவசியம்.

Categories

Tech |