Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு நடிக்கும் ”கொரோனா குமார்”……. படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா……?

‘கொரோனா குமார்’ படத்துக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Silambarasan's next is Corona Kumar, to be directed by Gokul - Movies News

இதனையடுத்து, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ”கொரோனா குமார்” என்ற படத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இந்நிலையில், ‘கொரோனா குமார்’ படத்துக்கு இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |