திருமணம் மற்றும் சீரியல்கள் குறித்து பவானி ரெட்டி எடுத்துள்ள முடிவு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் பாவனி ரெட்டி.
இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்துள்ளார். அப்போது ரசிகர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், ”புதிதாக எந்த சீரியலில் நடிக்கிறீர்கள்? என கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த அவர், ”இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன் எனவும், சீரியல் பற்றி எந்த பிளானும் இதுவரை பண்ணல” எனவும் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. மேலும், திருமணம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த இவர், ‘இனி தன் வாழ்க்கையில் திருமணம் என்பது கிடையாது’ என கூறியிருக்கிறார்.