Categories
சினிமா தமிழ் சினிமா

ஜூனியர் என்.டி.ஆரின் புதிய படத்தில் ஹீரோயின் யார் தெரியுமா…? வெளியான கலக்கல் தகவல்….!!!

பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் புதிய படத்தில் ஹீரோயின் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நாயகர்களாக வலம் வரும் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

இந்நிலையில் இப்படத்தில் யார் கதாநாயகியாக நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல நடிகை ஜான்வி கபூரிடம் எப்படி நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |