Categories
அரசியல்

சர்வதேச புற்றுநோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுவதன்…. வரலாறு என்ன தெரியுமா…? வாங்க பார்க்கலாம்…!!!

புற்றுநோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து, குணப்படுத்துவதை வலியுறுத்தும் நோக்கி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 7ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுவதை தவிர்க்க  நாடு முழுவதும்  விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இது உலகளாவிய ஒரு முன் முயற்சி ஆகும். இது மரணத்திலிருந்து பல மில்லியன் கணக்கிலான உயிர்களை பாதுகாக்கிறது. இதற்காக ஒவ்வொரு வருடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த நோய் பற்றிய கல்வியை வழங்குதல் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இது போன்ற செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.

முன்னாள் மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹம்சவர்தனால் 2014ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு அப்போது முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் ஒவ்வொரு வருடமும் உலக புற்றுநோய் தினம் பிப்ரவரி 4-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் கடந்த 2000 வருடத்தில் உலக புற்றுநோய் தினத்தை உருவாக்கியது.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் பரப்புவதற்கான முயற்சிகளில் உலக சுகாதார அமைப்பு மற்றும் பல சர்வதேச நிறுவனங்கள் சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியத்தை ஆதரித்து வருகின்றன. புற்று நோய்க்கு எதிரான முதல் உலக உச்சி மாநாடு பாரீசில் நடைபெற்றது.  அதில் இந்த நாளை கடைபிடிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

உலகம் முழுவதும் உள்ள அரசாங்க நிறுவனங்கள் மற்றும் புற்றுநோய் அமைப்புகளின் தலைவர்கள் புற்றுநோயாளிகளுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக உலகளாவிய உறுதிபாட்டை கோடிட்டு காட்டும் பத்து கட்டளைகள் கொண்ட ஒரு ஆவணத்தை எழுதினார்கள். அந்த ஆவணம் புற்று நோய்க்கு எதிரான charter of Paris என்று அழைக்கப்பட்டது. உலக அளவில் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் தடுப்பு மற்றும் சிகிச்சை முன்னேற்றங்களில் நிலையான முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Categories

Tech |