தமிழ் சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்ரன். இந்த படத்திற்கு பிறகு அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. பிரேமம் திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்களாகும் நிலையில், அல்போன்ஸ் புத்ரனின் அடுத்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு கோல்டு என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்திவிராஜ் மற்றும் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை பிரித்திவிராஜ் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் ரிலீஸ் சில காரணங்களுக்காக தள்ளிப்போனது. இந்நிலையில் கோல்டு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டிசம்பர் 2-ம் தேதி தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கோல்டு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.