Categories
தேசிய செய்திகள்

சினிமாவை மிஞ்சிய “ரியல் போலீஸ்”… என்ன செய்தார் தெரியுமா?…!!

மது பாட்டில்களை கடத்திச் சென்ற நபரை, சினிமா பாணியில் விரட்டி சென்று பிடித்த காவல் உதவியாளரை மேலதிகாரிகள் பாராட்டி வந்தனர்.

புலிவெந்துலா பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் காவல் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் கோபிநாத் ரெட்டி. இவருக்கு ஆந்திர மாநிலம் கடப்பா அருகே மது பாட்டில்களை கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.  அதன்பின் சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் அவர் நின்று கொண்டிருந்த பொழுது ஒரு கார் வேகமாக வந்து நிற்பது போல் பாவனை செய்து வேகமாக தப்பி சென்றது. இதனைக்கண்ட காவல் உதவியளர் கோபிநாத் அந்தக் காரில் தொற்றிக் கொண்டு இரண்டு கிலோமீட்டர் பயணம் செய்தார்.

ஆனாலும் வண்டியை நிறுத்தாமல்  ஓட்டுநர் வேகமாக சென்று கொண்டிருந்தார். இதனால் காரின் முன் கண்ணாடியை தனது காலால் கோபிநாத் உடைத்தார். இதைக் கண்டு பயந்து ஓட்டுநர் காரிலிருந்து குதித்து தப்பி சென்றுவிட்டார். கோபிநாத்தின் இத்தகைய தீவிர செயலால் காரில் இருந்த 82 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சினிமாவை மிஞ்சும் அளவில் மது பாட்டில்களை பறிமுதல் செய்த கோபிநாத்தை மேலதிகாரிகள் பாராட்டி வந்தனர். மேலும் இந்த மது பாட்டில் கடத்தல் வழக்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |